சாந்தனின் உடலை கையளிக்க 10000 ரூபா கையூட்டு பெற்ற நீர்கொழும்பு பொலிஸார்.?
சாந்தனின் உடலை கையளிக்க 10000 ரூபா கையூட்டு பெற்ற நீர்கொழும்பு பொலிஸார்.?
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட சாந்தனின் உடலை உறவினரிடம் ஒப்படைக்க நீர்கொழும்பு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 10000 கையூட்டு (இலஞ்சம்) பெற்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் (02-03-2024) சாந்தனின் உடலுக்கான மறு உடற்கூற்று பரிசோதனை நீர்கொழும்பு வைத்தியசாலையில் இடம்பெற்ற பின்னர் உடலை பெற்றுக்கொள்ள முதுமை காரணமாக தாயார் செல்ல முடியாத நிலையில் சட்டத்தரணி மற்றும் சமாதான நீதிவான் ஊடாக உறவினர் ஒருவர் உடலை பெற்றுக்கொள்ளும் வகையில் சட்டபூர்வமான கடிதம் ஒன்று நீர்கொழும்பு பொலிஸாரிடம் வழங்கப்பட்டது. வழங்கப்பட்ட கடிதம் தமிழில் இருப்பதனால் அதை ஏற்க முடியாது எனவும் சிங்கள மொழியில் கடிதம் வழங்க வேண்டுமென அங்கிருந்த பொலிஸார் கோரியுள்ளனர் அப்போது பொலிஸ் திணைக்களத்தில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் தமிழ் உத்தியோகத்தர் ஊடாக அதை மொழி மாற்றம் செய்து கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில் குறித்த கடிதம் மொழிபெயர்ப்பு செய்து வருவதற்கு முன்பாகவே அங்கிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உடலை பெறச் சென்ற உறவினரிடம் 10000 ரூபா நணத்தினை கையூட்டாக பெற்றுக்கொண்ட பின்னர் உடலை கையளித்துள்ளனர்.
இந்த தகவலை பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் ஒருவர் மன வேதனையுடன் தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
பனையால் விழுந்தவனை மாடேறி மிதிப்பது போன்று ஏற்கனவே துன்பத்தில் துவண்டு போய் இருக்கும் சாந்தனின் உறவினர்களுக்கு பொலிஸாரின் இந்த செயல் மிகுந்த வேதனையை அளித்திருக்கும் என்பதுடன் இலங்கையில் இலஞ்சம் எங்குவரை சென்றுள்ளது ? என்பதனையும் இது எடுத்துக் காட்டியுள்ளது.