இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
5 கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் கைதான நபர்!!
காலி, ரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கனேகொட பிரதேசத்தில் 5 கோடி ரூபா பெறுமதியான திமிங்கில வாந்தியுடன் (அம்பர்) சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார்.
ரத்கம, கனேகொட பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரிடமிருந்து 23 கிலோ நிறையுடைய திமிங்கில வாந்தி (அம்பர்) கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக ரத்கம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்