இலங்கைசெய்திகள்முக்கிய செய்திகள்
வவுனியாவில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் .
வவுனியாவில் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் .
“மீண்டும் ஊருக்குப் போகலாம்” எனும் தொனிப்பொருளில் நெடுநதீவு ஊரும் உறவும்(DO-U) அமைப்பினால் உலகம் முழுவதும் பரந்து வாழும் நெடுந்தீவு உறவுகளை ஒன்றிணைத்து 04.08.2024 தொடக்கம் 10.08.2024 வரை நடைபெற இருக்கும் “நெடுவூர்த் திருவிழா” தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இன்று ( 07-04-2024 ) காலை 10.45 மணியளவில் வவுனியா பொது நூலக மண்டபத்தில் இடம்பெற்றது.
நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியாவில் வசித்துவரும் நெடுந்தீவை பூர்வீகமாக கொண்ட பலர் கலந்து கொண்டிருந்தனர். இக்கூட்டத்தில் எதிர்வரும் ஆவணி மாதம் இடம்பெறவிருக்கும் நெடுவூர்த் திருவிழா ஏற்பாடுகள் தொடர்பாகவும் குறித்த திருவிழாவை சிறப்பாக நடாத்தி முடிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டதுடன் அனைவரது ஆலோசனைகளும், கருத்துக்களும் கோரப்பட்டு குறிப்பெடுக்கப்பட்டது.
இறுதியில் குறித்த நிகழ்வில் வவுனியா வாழ் நெடுந்தீவு மக்களின் பங்கேற்பை உறுதிப்படுத்துவதற்கும் நெடுந்தீவு உறவுகளை ஒன்றிணைப்பதற்கும் வவுனியாவில் ஒரு செயற்பாட்டு குழுவும் அமைக்கப்பட்டது.
தொடர்புக்கு :-
https://chat.whatsapp.com/EL0QmawzmvHAUgGpPwBHra
நெடுந்தீவு ஊரும் உறவும்(DO-U)
தொடர்புகளுக்கு:-
அலுவலகம்:- +94(77) 840 0534
நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர்:- +777395242