வெளிநாடொன்றில் தப்பியோடிய இலங்கையர்களால் அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!
இலங்கையில் இருந்து வேலைவாய்ப்புக்காக இஸ்ரேல் சென்ற பலர் தப்பியோடியுள்ளதாக, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த கால அரசாங்கங்களின் ஆதரவுடன் விவசாயத் துறையில் பணியாற்றுவதற்காக இஸ்ரேல் சென்றவர்களில் சுமார் 80 சதவீதமானவர்கள் தங்கள் பணியிடங்களை விட்டு தப்பி ஓடியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
விவசாய துறைகளில் வேலை செய்ய முடியாமல் தங்கள் பணியிடங்களை விட்டு சென்று வேறு வேலைகளில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இஸ்ரேல் அரசு விவசாயத் துறையில் அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை இலங்கைக்கு வழங்கியிருந்தது.
எனினும் ஊழல் அரசியல்வாதிகள் பொருத்தமற்றவர்களை அதற்கு தெரிவு செய்து, வேலைவாய்ப்பு துறையை சீரழித்துள்ளதாக கோசல விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசியல் சார்புகள் இன்றி, சரியான நபருக்கு சரியான பதவியை வழங்குவதே தற்போதைய அரசாங்க கொள்கை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இஸ்ரேலியல் விவசாயத்துறையில் அதிகளவான வேலைவாய்ப்புகள் இலங்கையர்களுக்கு காத்திருக்கின்றன.
இந்நிலையில் அவ்வாறு வேலைகளுக்கு செல்வோர் பொறுப்புடன் செயற்படுவதுடன், அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டாம் என பணியகத்தின் தலைவர் கோசல விக்ரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்