இலங்கைமுக்கிய செய்திகள்விளையாட்டு
வவுனியாவில் மகளிர் தினத்தில் கௌரவிக்கப்பட்ட உதைபந்தாட்ட மங்கை..
வவுனியாவில் மகளிர் தினத்தில் கௌரவிக்கப்பட்ட உதைபந்தாட்ட மங்கை..
இன்று (08-03-2024)சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு கொழும்பில் உள்ள தேசிய அளவிலான தொழில்சார் உதைபந்தாட்ட கழகத்தில் இணையவுள்ள புதிய மணிபுரத்தை சேர்ந்த செல்வி.மயில்வாகனம் பிளஸ்சிகா அவர்கள் வவுனியா உதைபந்தாட்ட சங்கம் சார்பாக கௌரவிக்கப்பட்டுள்ளார்.
வவுனியா உதைபந்தாட்ட சங்க தலைவரும், இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், வடமாகாண உதைபந்தாட்ட அபிவிருத்திகுழு தலைவருமான திரு.நாகராஜன் அவர்களின் நிதிப்பங்களிப்பில் உதைபந்தாட்ட காலணி, பந்து, உதைபந்தாட்ட தேசிய அணி சீருடை என்பன வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் வவுனியா உதைபந்தாட்ட சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.