முக்கிய செய்திகள்விளையாட்டு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான அன்ஷுமான் கெய்க்வாட் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 71 என்றும், கடந்த சில ஆண்டுகளாக இரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்த அன்ஷுமான் கெய்க்வாட், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வரை லண்டனில் இருந்த கெய்க்வாட், பல்வேறு உடல்நலக் கோளாறுகள் காரணமாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்.
கெய்க்வாட் இந்தியாவுக்காக 40 டெஸ்ட் போட்டிகளிலும், 15 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
70 போட்டிகளில் 1985 ஓட்டங்கள் குவித்த அவர், 1982-83ல் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகபட்சமாக 201 ஓட்டங்கள் எடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.