7ஆம் திகதி வெளியாகும் இறுதி முடிவு! மகிந்த களமிறக்கப் போகும் புது வேட்பாளர் யார்..
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் எதிர்வரும் 7ஆம் திகதி அறிவிக்கப்படும் என பொதுஜன பெரமுன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தற்போது இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரணிலுக்கு ஆதரவு
ஏற்கனவே, பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 90இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கப் போவதாக அறிவித்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியிலேயே தமது கட்சியின் வேட்பாளர் தொடர்பில் விரைவில் தீர்மானம் எடுத்து அறிவிக்கப்படும் என்று பொதுஜன பெரமுன குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய அரசியல் கட்சிகளுடன் இணைந்தாலும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நிச்சயம் வெற்றி பெறும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.