பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுவனின் உயிர் – வைத்தியசாலை மீது பெற்றோர் முறைப்பாடு
சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் (Sri Jayawardenepura) சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை ஊழியர்களே காரணம் என குழந்தையின் உறவினர்கள் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.
அங்குருவத்தோட்ட, ஹல்தோட்டை, பீதிகமுவ பகுதியைச் சேர்ந்த, ஹொரணை (Horana) பிரதான பாடசாலையில் நான்காம் வருடத்தில் கல்வி கற்கும் மாணவியான தனுஜ விக்கிரமாராச்சி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குழந்தைக்கு மயக்க மருந்து……
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியரின் ஆலோசனையின் பேரில் கடந்த 17 ஆம் திகதி அவர் பணிபுரியும் சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் உயிரிழந்த பிள்ளையின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பரிதாபமாக பறிபோன 9 வயது சிறுவனின் உயிர் – வைத்தியசாலை மீது பெற்றோர் முறைப்பாடு | Child Dies After Surgery At Jpura Hospital
மறுநாள் (18) பிற்பகல் 01.30 மணியளவில், இது தொடர்பான சத்திரசிகிச்சைக்காக குழந்தைக்கு மயக்க மருந்து செலுத்தப்பட்டது.
சத்திரசிகிச்சை நிறைவடைந்த போதிலும், குழந்தை சுயநினைவு பெறவில்லை