வாகன இறக்குமதிக்கான வரிக் கொள்கை : வெளியாகவுள்ள அறிக்கை
வாகனங்களை இறக்குமதி செய்வதற்கான வரிக் கொள்கை தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிடவுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்துள்ளார்.
இன்று (24) நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் இறக்குமதி செய்யப்படும் திகதி மற்றும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்ட வாகனங்களின் வகைகள் மாத்திரமே அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
வாகன இறக்குமதி…..
இதேவேளை வாகன இறக்குமதிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள அதேவேளை இறக்குமதி செய்யப்பட்டு மூன்று மாதங்களுக்கு மேல் விற்காமல் வைத்திருக்கும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகியிருந்தன.
வாகன இறக்குமதிக்கான வரிக் கொள்கை : வெளியாகவுள்ள அறிக்கை | Tax Policy For Importing Vehicles To Sri Lanka
இந்த விதிமுறைக்கமைய, பேருந்துகள், கிரேன்கள், கல்லி போவர் போன்ற சிறப்பு வாகனங்கள் மற்றும் சிறிய கார்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.