மீண்டும் ரணிலுக்கான ஆதரவை வெளிப்படுத்திய பிள்ளையான்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் கிராம வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என்கிற சிவநேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை, காரைதீவில் நடைபெற்ற கட்சியின் அம்பாறை மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
அதன் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அம்பாறை மாவட்ட தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் செயற்பாட்டாளர்களும் ஆதரவு வழங்குவார்கள் என்றும் அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கிழக்கு மாகாணத்தின் ஆதரவை வழங்க கட்சியின் செயற்குழு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விஜயம் செய்த போதே தனது ஆதரவை சிவநேசத்துரை சந்திரகாந்தன் வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.