முன்னாள் அமைச்சர் விஜயதாசவிற்கு நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட நிலை!
நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் பதவியிலிருந்து விலகிய கலாநிதி விஜயதாச ராஜபக்ஸவிற்கு ஆளும் கட்சியின் பின்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால் அமைச்சர்கள் அமர்ந்துள்ள இடங்களுக்குப் பிறகு அவருக்கு முன்னாள் அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கைகளில் ஒன்று ஒதுக்கப்படும். எவ்வாறாயினும், எதிர்க்கட்சிக்கு ஒரு ஆசனத்தை ஒதுக்குமாறு அவர் கோரினால், அதற்கும் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு நாடாளுமன்றத்தின் தலைவர்கள் கடமைப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.
விஜயதாச ராஜபக்ஸ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிடவுள்ளதால் அமைச்சுப் பதவியிலிருந்து விலகினார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்காத சிறிலங்கா பொதுஜன பெரமுன எம்.பி.க்களுக்கு எதிர்க்கட்சி ஆசனங்களை வழங்குவதற்கு எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.