இலங்கைஏனையவைமுக்கிய செய்திகள்
விபத்துக்குள்ளாகி வீட்டின் கூரையில் கவிழ்ந்த கார் :பெண்ணொருவர் படுகாயம்
மொரவக அலபதெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொரவக காவல்துறை போக்குவரத்துப் பிரிவு தெரிவித்துள்ளது.
நெலுவையிலிருந்து மொரவக்க நோக்கி சென்று கொண்டிருந்த கார் விபத்துக்குள்ளாகி பாதைக்கு அருகிலுள்ள வீட்டின் கூரையில் கவிழ்ந்து இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விபத்தினால் வீட்டின் பல கூரைத் தகடுகள் சேதமடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் காயமடைந்த பெண்ணை மாத்தறை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாகவும் இவ்விபத்துக்கான கரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.