இலங்கைசெய்திகள்விளையாட்டு
வடக்கில் முதலிடம் பெற்று மடு மாணவன் படைத்துள்ள சாதனை!
வட மாகாண ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று மடு கல்வி வலய மாணவன் சாதனை படைத்துள்ளார்.
வடக்கு மாகாண பாடசாலை ரீதியிலான 20 வயது பிரிவில் குத்துசண்டை போட்டியில் பங்குபற்றிய பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலய மாணவன் விஜிதன் கபிலன் முதலாம் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ளார்.
கடந்து 17 மற்றும் 18 – ம் திகதி முல்லைத்தீவில் நடந்த போட்டியிலேயே குறித்த மாணவன் பங்குபற்றி இவ்வாறு முதலாம் இடத்தினை பெற்று சாதித்துள்ளார்.
தற்போது மாகாண மட்ட பாடசாலை ரீதியிலான மெய்வல்லுனர் போட்டிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.