2024-ம் ஆண்டு “பூநகரி லீக் கிண்ணத்தை கைப்பற்றிய வலைப்பாடு ஜெகமீட்பர் அணி!
2024-ம் ஆண்டு “பூநகரி லீக் கிண்ணம்” வெற்றிக்கிண்ணத்தை வலைப்பாடு ஜெகமீட்பர் அணி கைப்பற்றியுள்ளது.
கிருபா பிறவைற் லிமிட்டற் நிதி அனுசரணையுடன் பூநகரி உதைபந்தாட்ட சம்மேளன அங்கத்துவ கழகங்கள் பங்குபற்றும் உதைபந்தாட்டத் தொடரின் இறுதி ஆட்டம் நேற்றையதினம் (14.09.2024) கிராஞ்சி செந்தாரகை விளையாட்டுக் கழக மைதானத்தில் பிற்பகல் 04:00 மணிக்கு பூநகரி உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் திரு ராஜ்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த போட்டியின் இறுதி ஆட்டத்தில் வலைப்பாடு மெசியா வலைப்பாடு ஜெகமீட்பர் அணியினர் மோதிக்கொண்டனர்.
மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற குறித்த போட்டியில் ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் கோல்கள் எதுவும் பெறாத நிலையில் சமநிலை தவிர்ப்பிற்காக சமநிலை தவிர்ப்பு உதை வழங்கப்பட்டு 04:03 என்ற கோல்கள் கணக்கில் வலைப்பாடு ஜெகமீட்பர் அணி வெற்றி பெற்று பூநகரி லீக் கிண்ணம் 2024 Champion பட்டத்தை பெற்றுக்கொண்டது.
இவ் இறுதி ஆட்ட நிகழ்விற்கு மன்னார் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் தலைவரும் முன்னாள் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்தின் உப தலைவருமான திரு ஞானப்பிரகாசம் அன்ரனி டெவின்சன் ( ஜெரால்ட்) பிரதம விருந்தினராக கலந்து கொண்டதுடன், பங்குதந்தை உட்பட பலர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.