இலங்கைமுக்கிய செய்திகள்விளையாட்டு
அகில இலங்கை ரீதியில் சாதனை படைத்த நாச்சிக்குடா மாணவன்!
தேசிய ரீதியில் வெள்ளி பதக்கத்தினை பெற்று நாச்சிக்குடா மாணவன் சாதனை படைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான ஆண்கள் பெண்களுக்கான பளுதூக்கல் போட்டிகள் பொலநறுவை இராஜகிரிய தேசிய பாடசாலையில் நடைபெற்று வருகிறது.
இதில் 17 வயதிற்கு உட்பட்ட ஆண்களுக்கான பளுதூக்கல் போட்டியில் 102 கிலோவிற்கு மேற்பட்ட பிரிவில் பங்குபற்றிய நாச்சிக்குடா அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் யூ.ஆதித்தன் 149 கிலோ எடையைத் தூக்கி வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
குறித்த மாணவனுக்கு பாடசாலை சமூகம் உட்பட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் குறித்த மாணவன் தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையிலும் சித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.