இலங்கைமுக்கிய செய்திகள்விளையாட்டு
தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ள மடு மாணவர்கள்!
தேசிய மட்ட ரீதியில் பெரியபண்டிவிரிச்சான் மகா வித்தியாலயத்தினை சேர்ந்த இரு மாணவர்கள் இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தினை பெற்று சாதித்துள்ளனர்.
2024-ம் ஆண்டு தேசிய மட்ட Taekwodo போட்டிகள் இரத்தினபுரி மாவட்டத்தில் கடந்த மாதம் 28, 29, 30-ம் திகதிகளில் இடம்பெற்றிருந்தது.
இந்நிலையில் குறித்த போட்டியில் மன்னார் மடு கல்வி வலயத்திற்குட்பட்ட மன்/பெரியபண்டிவிரிச்சான் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அந்த வகையில் 18 வயதின் கீழ் ஆண்கள் பிரிவில் k.டினோசன் சில்வா இரண்டாம் இடத்தினை பெற்று வெள்ளிப் பதக்கத்தினை சுவீகரித்து சாதனை படைத்துள்ளார்.
அதே வேளையில் 18 வயதின் கீழ் பெண்கள் பிரிவில் R.இசைப்பிரியா மூன்றாம் இடத்தினைப் பெற்று வெண்கலப் பதக்கத்தினை சுவீகரித்து சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.