முக்கிய செய்திகள்விளையாட்டு
இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடர் இன்று தொடங்குகிறது
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, சூர்யகுமார் யாதவ் தலைமையில் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இன்று தொடங்குகிறது. டர்பனில் உள்ள கிங்ஸ்மீட் ஸ்டேடியத்தில் நடைபெறும் இந்த முதல் போட்டியில், இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல் போன்ற அனுபவ வீரர்கள் அணியின் வெற்றிக்காக களமிறங்குகின்றனர். அதேசமயம், தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம் தலைமையிலான அணியில் ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், ரீசா ஹென்ரிக்ஸ் போன்ற வீரர்கள் இந்திய அணிக்கு சவால் விடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் நடைபெற உள்ள ஐ.பி.எல். ஏலத்தை கருத்தில் கொண்டு, இந்த தொடரில் சிறப்பாக செயல்படும் வீரர்கள் அதிக தொகைக்கு ஏலம் போக வாய்ப்புள்ளது. அந்த வகையிலும் வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் பெற்றுள்ளது.