உலகம்சமூகம்முக்கிய செய்திகள்
சமூக வலைத்தள பயன்பாட்டிற்கு கட்டுப்பாடு : ஆஸ்திரேலியா
உலகிலேயே முதன்முறையாக, ஆஸ்திரேலியா சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தும் வயதை 16 ஆக உயர்த்த உள்ளது. இதுவரை 13 வயதுக்கு மேற்பட்டவர்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த முடிந்த நிலையில், இனி அந்த வயது 16 ஆக உயர்த்தப்படும்.
இந்த முடிவு, அதிகப்படியான சமூக வலைத்தள பயன்பாட்டால் ஏற்படும் மனநலப் பிரச்சினைகள், கவனச்சிதறல் மற்றும் தனிமைப்படுத்தல் போன்ற பிரச்சினைகளைக் குறைக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த முன்னெடுப்பு, சமூக வலைத்தளங்களின் தாக்கத்தை குறைத்து, குழந்தைகளின் மனநலம் மற்றும் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டுள்ளது.