உலகம்முக்கிய செய்திகள்
தப்பிய குரங்குகள் தேடல்: தென் கரோலினாவில் பதற்றம்
தென் கரோலினாவில் உள்ள ஆய்வகத்திலிருந்து 43 குரங்குகள் தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வகப் பாதுகாவலர் கூண்டை சரியாக மூடாத காரணமாக இந்த குரங்குகள் தப்பிச் சென்றுள்ளன. இந்த குரங்குகள் மருத்துவ ஆய்வுகளுக்காக பயன்படுத்தப்படும் ரீசஸ் மக்காக் (rhesus macaque) இனத்தைச் சேர்ந்தவை. குரங்குகளை கண்டால் உடனே காவல்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குரங்குகளை உணவு மூலம் கவர்ந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.