சமூகம்
வவுனியாவில் கடைதொகுதிக்கு முன் கிடந்த சடலம்
வவுனியா(Vavuniya) – கோவில்குளம் சந்தி அருகில் அமைந்துள்ள கடைத்தொகுக்கு முன்பாக முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று(09.12.2024) காலை மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வவுனியா, கோவில் புதுக்குளத்தை சேர்ந்த 63 வயதுடைய எம். விஜயரத்தினம் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணை……
இதேவேளை, உயிரிழந்தவரின் சடலத்தினை திடீர் மரண விசாரணை அதிகாரி லா.சுரேந்திரசேகரன் பார்வையிட்டுள்ளார்.
வவுனியாவில் கடைதொகுதிக்கு முன் கிடந்த சடலம் | A Man Body Found In Vavuniya
மேலும், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்