இலங்கை

அவுஸ்திரேலியாவில் பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்ற இலங்கைச் சிறுமி!!

இலங்கை வம்சாவளியை சேர்ந்த சிறுமி 12 வயதுக்குட்பட்ட அவுஸ்திரேலியாவின் விக்டோரியா பெண்கள் கிரிக்கெட் அணிக்கு தகுதி பெற்றுள்ளார்.

இம்முறை விக்டோரியா பெண்கள் அணியில் இணைவதற்கு கியானா ஜயவர்தன என்ற சிறுமி தகுதி பெற்றிருந்தார்.

நவம்பர் மாதம் 30ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் நடைபெற்ற School Sport Australia கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு கியானா ஜயவர்தனாவுக்கு கிடைத்தது.

அவர் Melbourne Cricket Coachingஇல் பயிற்சி பெற்ற வீராங்கனை ஆவார், மேலும் மெல்போர்ன் கிரிக்கெட் பயிற்சியின் மூன்று வீரர்கள் School Sport Australia போட்டியில் விக்டோரியா அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

கியானா ஜயவர்தன பல ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் பயிற்சி பெற்று பொருத்தமான திறன்களை வளர்த்துக் கொண்ட ஒரு விளையாட்டு வீராங்கனை என்று MCC தெரிவித்துள்ளது.

 

அதற்கமைய, 12 வயதுக்குட்பட்ட விக்டோரியா பெண்கள் அணிக்கு MCC வீராங்கனைகளான கியானா ஜெயவர்த்தனே மற்றும் என்னா ஷைன் ஆகியோர் தகுதி பெற்றனர்.

இதற்கிடையில், ஆரவ் வினோத்குமார் 12 வயதுக்குட்பட்ட விக்டோரியா சிறுவர்கள் அணிக்காக MCC யால் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் ஆவார்.

அவர்களின் கடின உழைப்பு, ஆர்வம் மற்றும் விளையாட்டின் மீதான அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் இம்முறை விக்டோரியா சிறுவர் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியில் இணைந்ததாக கூறப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button