சமூகம்

யாழில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு – உயர்தர பரீட்சையில் திருப்தி இல்லை

க.பொ.த உயர்தர பரீட்சையினை திருப்திகரமாக எதிர் கொள்ள முடியவில்லை என்ற விரக்தியில் யாழ்ப்பாணத்தில் (Jaffna) மாணவி ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (30.12.2024) இடம்பெற்றுள்ளது.

தெல்லிப்பழை மகாஜனா கல்லூரியில் கல்வி பயின்ற சிறிகேசவன் ஸ்ரெபிகா (வயது 19) என்ற மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை…….

 

…..

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த மாணவி 30ஆம் திகதி பரீட்சைக்கு தோற்றிவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.

யாழில் மாணவி தவறான முடிவெடுத்து உயிரிழப்பு – உயர்தர பரீட்சையில் திருப்தி இல்லை | Al Examination Student Commits Suicide In Jaffna

நேற்றைய பரீட்சை திருப்திகரமாக இல்லை என தாய் – தந்தையருக்கு கூறி கவலையடைந்துள்ளார். பின்னர் அவரது தந்தை அலுவலாக வெளியே சென்றவேளை குறித்த மாணவி தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துக்கொண்டுள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயவாலசிங்கம் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

உயிரிழந்த மாணவி க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் 7ஏ 2பி சித்திகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button