தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா வடக்கில் பரிசளிப்பு நிகழ்வு…
வவுனியா வடக்கில் "பரிசளிப்பு நிகழ்வு"
வவுனியா வடக்கு பிரதேச சபையினரால்.. தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பானது, கடந்த 31.12.2024 அன்று வவுனியா வடக்கு பிரதேச சபை உப அலுவலகத்தின் ‘கலாசார மண்டபத்தில்’ நடைபெற்றது.
சபையினுடைய செயலாளர் திருமதி சோ.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக, வவுனியா மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு தெ.ரதீஸ்வரன் கலந்துகொண்டார்.
சின்னஞ்சிறு மழலைகளின் “வரவேற்பு வாத்தியங்கள்” முழங்க, விருந்தினர்கள் மண்டபத்திற்குள் அழைத்து வரப்பட்டனர். குழந்தைகளின் மயில்நடனம் பலரையும் கவர்ந்திருந்தது.
போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளான மாணவர்கள், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிக்கு மேலாகப் பெற்ற மாணவர்கள் என மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வாகவே அமைந்திருந்தது.
சிறந்த வாசகர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டதுடன், வளர்ந்துவரும் எழுத்தாளர் ஒருவரும் கௌரவிக்கப்பட்டார். நடுவர்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பிரதேச சபையின் வெளியீடாக, “தூரிகை” எனும் நூலும் வெளியிடப்பட்டது. வர்த்தக சங்கத்தினர் நூலுக்கான பேராதரவை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வொழுங்கானது நேர்த்தியாக அமைந்திருந்தது. அதிகளவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் கிடைக்கச் செய்திருந்தனர். அண்ணளவாக மூன்று மணித்தியாலங்களில் நிறைவு கண்டது.
புதிதாக திருத்தப்பட்டு கம்பீரமாகவும் கவர்ச்சியாகவும் பிரதேச சபையின் “கலாசார மண்டபம்” காட்சிதந்துகொண்டிருந்தது. இனிவரும் காலங்களில் வேறுபல நிகழ்வுகளுக்காகவும் வாடகைக்கு விடப்படும் எனவும் அங்கு அறிவிக்கப்பட்டது.
சுருங்கச்சொன்னால், நல்லதொரு நிகழ்வு