இந்த விடயத்தால் தான் அவவுக்கும் எனக்கும் சண்டை: தினேஷ் கூறிய பதில்!
பிக் பாஸ் பகுதி 7 மற்ற சீசன்கள் போல் இல்லாமல் வித்தியாசமான விதிமுறைகளுடன் தொடங்கியது.
சமீபத்தில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெற்றாலும் போட்டியாளர்கள் இன்னும் பிக் பாஸ் சிந்தனையில்தான் இருக்கிறார்கள், ஆம். பிக் பாஸ்ஸில் எப்படி A டீம் B டீம் என்று இருந்தார்களோ, வெளியவும் அப்படி தான் இருக்கின்றனர்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட பிக்பாஸ் புகழ் தினேஷ், பிக் பாஸ் வீட்டில் விசித்திரா உடன் ஏற்பட்ட மோதல் குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர் கூறுகையில், பிக் பாஸ் வீட்டில் ஒரு முறை தலைவராக இருக்கும் போது விசித்திரா கோபப்பட்டு வெளியே உறங்கிருந்தார், அந்த சமயத்தில் ஒரு தலைவராக அவரை எப்படியாவது சமாதானம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் அவரிடம் சென்று சாப்பாடு வைத்தேன்.
நான் அப்படி செய்ததை தவறாக புரிந்துகொண்டு என்னிடம் கோவப்பட்டார். அதை அடுத்து, ஒவ்வொரு இடத்திலும் எங்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அடுத்த வாரமே மாயா உடன் சேர்ந்து சர்க்கரை ஒழித்து வைத்தனர். அப்போது நான் அவரை பற்றி பேச பெரிய பிரச்சனையே கிளம்பியது என்று தினேஷ் கூறியுள்ளார்.