இலங்கை
தமிழரசு கட்சியின் தலைவருக்கான தேர்தலில் நான் வெற்றி பெறுவேன்: ஸ்ரீதரன்!
தமிழரசு கட்சியின் அடுத்த தலைவருக்காக மூன்றுபேர் போட்டியிட்டாலும் அனைவருடைய ஒத்துழைப்போடும் நான் வெற்றிபெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
தமிழரசு கட்சியின் புதிய தலைவரை தெரிவு செய்வதற்கான தேர்தல் நாளையதினம் (21) கிழக்கு மாகாணம் திருகோணமலையில் நடைபெறவிருக்கின்ற நிலையில் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துதெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.