Uncategorized
வவுனியாவில் சுகிர்தராஜனின் 18வது நினைவுதினம் அனுஸ்டிப்பு!
- வவுனியாவில் சுகிர்தராஜனின் 18வது நினைவுதினம் அனுஸ்டிப்பு!
படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சு.சுகிர்தராஜனின் 18வது நினைவுதினம் வவுனியா ஊடக அமையத்தில் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.
இதன்போது சுகிர்தராஜனின் திருவுருவப்படத்திற்கு தீபமேற்றி மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
இன்று (24-01-2024) மலை 4.30 மணியளவில் வவுனியா ஊடக அமையத்தின் அமையத்தின் தலைவர் கு.கோகுலன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.
ஊடகவியலாளர் சுகிர்தராஜன் கடந்த 2006 ஆம் ஆண்டு திருகோணமலையில் வைத்து படுகொலைசெய்யப்பட்டிருந்தார். எனினும் இதுவரை அவரது படுகொலையுடன் தொடர்புடையவர்கள் தண்டிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.