சற்றுமுன் இலங்கையில் இளையராஜவின் மகள் மரணம்!
பின்னணி பாடகியும், இசையமைப்பாளரும், இளையராஜவின் மகளுமான பவதாரிணி உடல் நலக்குறைவு காரணமாக அவரது 47-வது வயதில் காலமானார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி இன்று (25) மாலை காலமானார்.
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி கடந்த 6 மாத காலமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.
பல படங்களில் பவதாரிணி பாடல்களை பாடியுள்ளார், அத்தோடு பாரதி படத்தில் அவர் பாடிய ஒரு பாடலுக்காக தேசிய விருதையும் வென்றிருந்தார்.
அவரது சடலம் நாளை மாலை சென்னைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் எதிர்வரும் சனிக்கிழமை இலங்கையில் இடம்பெறவுள்ள இசை நிகழ்ச்சிக்காக நேற்றைய தினம் இளையராஜா இலங்கை வந்து குறித்த இசை நிகழ்விற்கு தயாராகிக்கொண்டிருந்த நிலையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.