Uncategorizedஇலங்கைமுக்கிய செய்திகள்
கிளிநொச்சியில் ஏற்பட்ட பரபரப்பு: காணொளி கையில் இருக்கிறது: சிறீதரன் அதிர்ச்சி தகவல்!
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தடுக்க முயன்ற போது தன் மீது காவல்துறை அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அத்துடன் தாக்குதல் தொடர்பான காணொளி ஆதாரங்களை வெளியிட தயாராக உள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இச்சம்பவத்தின் மூலமாக ஸ்ரீலங்கா அரசின் கோரமுகத்தை உலகத்தின் கண்முன் கொண்டு வந்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை காவல்துறையினர் தூக்கிச் சென்று வாகனங்களில் ஏற்றியதுடன் பெண்கள் இழுத்துச் செல்லப்பட்டு துாக்கி வீசப்பட்டமை காவல்துறையினரின் அராஜகத்தை எடுத்துக்காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.