வவுனியாவில் சிறுவர்களை ஊக்கப்படுத்திய ‘EVAHSAA ” நிறுவனம்.
வவுனியாவில் சிறுவர்களை ஊக்கப்படுத்திய ‘EVAHSAA ” நிறுவனம்.
வவுனியாவில் சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கான காட்சியறைகளை நடாத்தி வரும் EVAHSAA நிறுவனம் ‘EVAHSAA KIDS WORLD” எனும் சிறுவர்களுக்கான காட்சியறையின் மூன்றாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு திறந்த விண்ணப்ப கோரலுக்கு அமைவாக பதிவு செய்த சிறுவர்களுக்கான ஓவியப் போட்டி ஒன்றினை நடாத்தி சிறுவர்களை ஊக்கப்படுத்தியுள்ளது.
இன்று (04-02-2024) ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு ஓவியப் போட்டிக்கு விண்ணப்பித்த 40 ற்கும் மேற்பட்ட சிறுவர்களையும் அவர்களது பெற்றோர்களையும் தமது காட்சியறைக்கு அழைத்து இரண்டு வயதுப் பிரிவுகளாக பிரித்து நடுவர்கள் முன்னிலையில் ஓவியங்களை வரையச் செய்து அவற்றினை ஆய்வு செய்து இரண்டு வயதுப் பிரிவுகளிலும் முதல் மூன்று இடங்களை பெற்ற சிறுவர்களுக்கு வெற்றி கோப்பையுடன் பரிசில் மற்றும் சான்றிதழும் வழங்கி வைக்கப்பட்டதுடன் பங்கு பற்றிய அனைத்து சிறுவர்களுக்கும் சான்றிதழ்களும் பரிசல்களும் வழங்கி வைக்கப்பட்டது.
“EVAHSAA” நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. காயத்திரி கஜதீபன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஓவிய ஆசிரியர் திரு என்.சிறிகாந்தன் , ஆசிரியர் திரு.கே.நிரஞ்சன் ஆகியோர் நடுவர்களாகவும் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டதுடன் எமது ஆதித்ரா செய்தி குழுமத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான திரு. என். ஜனகதீபன் ( ஜனகன் நடராசா) அவர்களும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தார்.