இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானியாவில் கண்டன கரிநாள் பேரணி!
ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரித்தானிய பேரரசின் மன்னரை நோக்கிய மாபெரும் கண்டன கரிநாள் பேரணியானது நேற்றைய தினம் (04) பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.
பிரித்தானிய தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினரின் ஏற்பாட்டில் நேற்றையதினம் காலை 11 மணியளவில் பிரித்தானியா இலங்கை தூதரகத்திலிருந்து ஆரம்பித்து நாடளுமன்ற முன்றலில் நிறைவுற்றிருந்தது.
இலங்கை சுதந்திரமடைந்த 76-ஆவது சுதந்திர தினத்தினை முன்னிட்டு தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெறும் ஒடுக்கு முறைக்கு எதிராகவும், வட்டுக்கோட்டை தீர்மானத்தை வலியுறுத்தி தன்னாட்சிக்கான உரிமைக்குரல் எனும் தொனிப்பொருளில் இவ்வாறு கரிநாள் போராட்டம் பிரித்தானிய தமிழர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த கரிநாள் பேரணியில் பிரித்தானிய வாழ் தமிழ் மக்கள், பொது அமைப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன், பிரித்தானியாவில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு முன்பாக ஸ்ரீலங்கா தேசியக் கொடி ஏற்றப்பட்டுள்ள நிலையில் அதற்கு நிகராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கொடியும் ஏற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நன்றி – IBCTAMIL
பட உதவி – சுதன்.