Uncategorizedஇலங்கைசினிமா
ஹரிஹரன் வந்தாச்சு: அவள் வருவாளா என தமன்னாவிற்கு காத்திருக்கும் யாழ்ப்பானிஸ்!
NORTHERN UNI இன் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சிக்காக இன்றைய தினம் தென்னிந்திய பின்னணி பாடகர் ஹரிஹரன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் பலாலி விமானநிலையம் ஊடாக இன்று மதியம் அவர் நாட்டை வந்தடைந்துள்ளார்.
ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் முற்றவெளியில் எதிர்வரும் (9)ஆம் திகதி நடைபெறவுள்ளது.
குறித்த இசை நிகழ்ச்சிகாக நேற்றையதினம் (6) தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் தென்னிந்திய நடன இயக்குனர் கலா மாஸ்டர் உள்ளிட்டோர் வருகை தந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, குறித்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நடன இயக்குனர் சாண்டி, யோகிபாபு, நடிகை தமன்னா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஸ் ஆகியோரும் வருகை தரவிருக்கின்றனர்.