Uncategorizedஇலங்கை
கிழக்கில் மாணவர்கள் சடலங்களாக மீட்பு: நடந்தது என்ன?
அம்பாறையில் கடலில் மூழ்கி காணாமல் போன பாடசாலை மாணவர்கள் இருவரும் இன்றையதினம் (17) முற்பகல் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாளிகைக்காடு – சாய்ந்தமருதைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 8 பேர் நிந்தவூர் பிரதேச கடலில் நேற்றையதினம் பிற்பகல் படம் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தபோது அதில் இருவர் கடலில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போயிருந்த நிலையில் அவர்களின் சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன.
மாளிகைக்காடு பிரதேசத்தைச் சேர்ந்த சூர்தீன் முஹம்மட் முன்சிப் (வயது 15), சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மட் இல்ஹம் (வயது 15) ஆகிய இரண்டு மாணவர்களே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நிந்தவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.