Uncategorizedஇலங்கைமுக்கிய செய்திகள்
மோட்டார் சைக்கிள் ரெயிலில் மோதி விபத்து: பெண் மற்றும் குழந்தைகள் பலி!
ஆராச்சிக்கட்டுவ மய்யாவ பகுதியில் மோட்டார் சைக்கிள் புகையிரதத்துடன் மோதி இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவரும் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர்.
இன்றையதினம் பிற்பகல் தனது குழந்தையையும் மற்றுமொரு குழந்தையையும் மேலதிக வகுப்புக்கு அழைத்துச் சென்ற தாய் பயணித்த மோட்டார் சைக்கிளே இவ்வாறு ரயிலில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஆராச்சிக்கட்டுவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.