Uncategorizedஇலங்கை
வவுனியா த.ம. மகா வித்தியாலயத்தில் சிறப்பாக இடம்பெற்ற கால்கோள் விழா! (படங்கள்)
வவுனியாவில் முன்னணி பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் 2024 ஆண்டுக்கான தரம் ஒன்று மாணவர்களுக்கான வரவேற்பு விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
இன்று (22-02-2024) காலை 8.30 மணியளவில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் பாடசாலையின் முதல்வர் ஆ. லோகேஸ்வரன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது
குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் சு.அன்னமலர் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக வவுனியா தெற்கு வலைய ஆரம்ப பிரிவு உதவிக்கல்விப் பணிப்பாளர் த.தவேந்திரலிங்கம், உதவி அதிபர் உதயராஜன், பொறுப்பாசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.