இலங்கைமுக்கிய செய்திகள்

தலைமன்னார் சிறுமி விவகாரம்: புலிகள் சந்தியில் மரண தண்டனை கொடுத்தார்கள்!

தென்னிலங்கை ஆட்சியாளர்களினால் தமிழனத்தை அழிப்பதற்கு தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போதிலும் உலகெங்கும் தமிழ்மொழி பரந்துவிரிந்து வளர்ந்து வருவதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் புதன்கிழமை இடம்பெற்ற சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பான விவாத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து மேலும் உரையாற்றிய சாள்ஸ் நிர்மலநாதன்,

‘‘இலங்கை சுதந்திரம் அடைந்து 76 வருடங்கள் கடந்துள்ள போதிலும் சரியான பொருளாதார கொள்கை இல்லாமையால் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.

தமிழர்களை ஒடுக்குவதற்கு புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன், தமிழினத்தை அழிப்பதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் காரணமாகவே இலங்கை இவ்வாறு பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.

வடக்கு கடற்பரப்பில் கடற்றொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட முடியாத நிலையில் இருக்கின்றனர், வடக்கு கடற்பரப்பு பாரிய வளச் சுரண்டல்களுக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு இலங்கை ஆட்சியாளர்கள்தான் பொறுப்புக்கூற வேண்டும்.

இலங்கையில் சகல மக்களும் இன, மத மற்றும் மொழி ரீதியாக சமத்துவத்துடன் வாழக்கூடிய வகையில் அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு பொருளாதார கொள்கையினூடாக இனிமேலும் பயணிக்காவிட்டால் இன்னும் 50 வருடங்கள் கடந்தாலும் இலங்கை இவ்வாறான நிலையிலேயே இருக்கும்.‘‘ என்றார்.

‘‘கடந்த 15 ஆம் திகதி தலை மன்னாரில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு 10 வயதுடைய சிறுமி கொலை செய்யப்பட்டார்.

அவ்வாறான கொடூரச் செயலில் ஈடுபட்டவருக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என மன்னார் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை 1998ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் நீதி நிர்வாகத்தில் இதேபோன்று பாடசாலை மாணவி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்பத்தப்பட்ட போது முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சந்தியில், இவ்வாறு கொடூர செயலில் ஈடுபட்ட நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழர் தாயகத்தில் சிறுவர்கள், பெண்களுக்கு பாதுகாப்பு காணப்பட்டது என சாள்ஸ் நிர்மலநாதன் மேலும் தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button