இலங்கைமுக்கிய செய்திகள்
முல்லைத்தீவில் கத்தி குத்து தாக்குதலில் இளைஞன் பலி!
முல்லைத்தீவில் கத்தி குத்து தாக்குதலில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்றையதினம் (24) அதிகாலை முல்லைத்தீவு மாங்குளம் ஒலுமடு தச்சடம்பன் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
வீதியால் பயணித்த இளைஞனை வளிமறித்த மற்றும் ஒரு இளைஞன் குறித்த இளைஞனை கத்தியால் குத்தியதில் படுகாயமடைந்துள்ளார்.
தொடர்ந்து இளைஞன் மாங்குளம் ஆதார மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போது இடை வழியில் உயிரிழந்துள்ளார்.
27 அகவையுடைய விஜயராசா சோபிதன் என்ற இளைஞனே இவ்வாறு கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்
இவரது சடலம் மாங்குளம் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,
சம்பவம் தொடர்பில் ஒருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.