யாழில் சகோதரன் மற்றும் சகோதரி மீது மற்றொரு சகோதரன் கத்திக்குத்து தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் கத்திகுத்துக்கு இலக்கான நிலையில் இருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நடந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதரர்களுக்கு இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு, அது முற்றிய நிலையில் கைக்கலப்பாகமாறியுள்ளது.
இந்நிலையில், இரு சகோதரர்களுக்கு இடையில் இடம்பெற்ற சண்டையை விலக்கி சமாதனப்படுத்த சகோதரி முயற்சித்துள்ளார்.
இதன்போது சகோதரன் ஒருவர் தனது சகோதரி மற்றும் சகோதரன் மீது கத்தி குத்து தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை தொடர்ந்து காயமடைந்த இருவரையும் அயலவர்கள் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் கத்தி குத்து தாக்குதல் நடத்திய சகோதரனை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.