இலங்கைமுக்கிய செய்திகள்
சற்றுமுன் கொழும்பை வந்தடைந்தது சாந்தனின் பூதவுடல்
சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடல் சற்று முன்னர் கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.
எனினும் இதனை தொடர்ந்து சாந்தனின் உடல் கொழும்பில் இருந்து தரைவழியாக யாழ்ப்பாணம் கொண்டு செல்லப்படவுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
சாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தை சென்றடைந்ததும், அங்குள்ள தனியார் மலர்சாலையில் அவரது பூதவுடல் வைக்கப்படவுள்ளது.
இதனை தொடர்ந்து, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை உடுப்பிட்டியில் உள்ள அவரது இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் அடக்கம் செய்யப்படவுள்ளதாக பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்
அத்தோடு இறுதிகிரியைகள் தொடர்பான தகவல்கள் குறித்து இதுவரை எதுவும் தெரியவரவில்லை.
சாந்தனின் உடலை கையளிப்பதற்காக சட்டத்தரணி புகழேந்தியும் சென்னையில் இருந்து அதே விமானத்தில் இலங்கைக்கு வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.