இலங்கைசெய்திகள்

பிரித்தானியா செல்வோருக்கு வழங்கப்பட்ட சலுகை

பிரித்தானியாவுக்கு பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக வருபவர்களுக்கு, பிரித்தானியாவில் இருந்தபடியே தமது சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட வகை பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பார்வையாளர் விசா (Visitor Visa) மூலமாக பிரித்தானியா வருபவர்கள், தங்கள் நாட்டில் விட்டுவந்த அல்லது முடிக்க வேண்டியுள்ள சில பணிகளை (Remote work), பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர முடியும் என தெரிவிக்கபட்டுள்ளது.

மேலும் சுற்றுலாவுக்காக, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதற்காக, மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வருபவர்கள், சில குறிப்பிட்ட பணிகளை பிரித்தானியாவிலிருந்தவண்ணம் தொடர வழிவகை செய்யபட்டுள்ளது.

அதன்படி இந்தச் சலுகையானது, இந்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் 31ஆம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் இருந்த வண்ணமே சொந்த நாட்டில் பணியைத் தொடர்வதாக இருக்கக்கூடாது என்ற விடயமும் இங்கே கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது.

அத்தோடு    அவர்களுடைய முதன்மையான நோக்கம், சுற்றுலாவாகவோ, குடும்ப உறுப்பினர்களை சந்திப்பதாகவோ, மாநாடு ஒன்றில் கலந்துகொள்வதாகவோ இருந்து, அந்த நேரத்தில் தங்கள் சொந்த நாட்டில் முடிக்கவேண்டிய பணியைத் தொடர்வதாக இருந்தால், அதற்கு அனுமதி உண்டு.

தெளிவாக சொல்லப்போனால், மின்னஞ்சல்களுக்கு பதிலளிப்பது, தொலைபேசி அழைப்புகளை ஏற்று அவற்றிற்கு பதிலளிப்பது, காணொளிமூலம் கூட்டங்களில் பங்கேற்பது முதலான தொலைக்கட்டுப்பாட்டு கருவிகள் மூலம் செய்யப்படும் பணிகளைச் செய்ய மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் முதலானோர் சுற்றுலா போன்ற விடயங்களுக்காக பிரித்தானியா வரும்போது, அவர்கள் தங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button