மொரட்டுவை இந்திபெத்த பெக்வத்த பகுதியில் பெண்ணொருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் 50 வயதுடைய பெண் ஒருவரே படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலையை செய்த நபர் மொரட்டுமுல்ல காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு, கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் சிறையில் இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
அத்தோடு உயிரிழந்த கணவரின் உறவினர் ஒருவரால் இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.