நடிகரும் அரசியல் வாதியுமான விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார. லைகா நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்கவுள்ள சஞ்சய், இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளார்.
கவின், அஸ்வின், துல்கர் சல்மான், துருவ் விக்ரம் என பல நடிகர்களின் பெயர் இப்படத்தின் ஹீரோ லிஸ்டில் அடிபட்டது. ஆனால், தற்போது இவர்கள் யாருமே இப்படத்தில் நடிக்கவில்லையாம். படத்தின் பட்ஜெட் சற்று அதிகாரித்துள்ள காரணத்தினால், பெரிய மார்க்கெட் வைத்துள்ள ஹீரோவிடம் இந்த கதையை சொல்லியுள்ளார் சஞ்சய்.
அது அவர் வேறு யாருமில்லை நடிகர் சிவகார்த்திகேயன் தான். ஆம், சிவகார்த்திகேயனிடம் தன்னுடைய முதல் படத்தின் கதையை சஞ்சய் கூறியுள்ளார். ஆனால், இது எனக்கான படம் கிடையாது, என்னுடைய படம் என்றால் அதில் சில கமர்ஷியல் விஷயங்கள் இருக்க வேண்டும் என கூறி சஞ்சய் சொல்லிய கதையை நிகரித்து விட்டாராம் சிவா.
கமர்ஷியல் விஷயங்கள் இல்லை என்று சொல்லி சிவகார்த்திகேயன் நிராகரித்ததாக சொல்லப்பட்டாலும், மறுபக்கம் விஜய்யும் இதற்கு ஒரு காரணம் என சொல்லப்படுகின்றது.
அத்தோடு தனது தந்தை விஜய்யின் ஆசி இல்லாமல் தான் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறாரார் என்றும், இந்த நேரத்தில் சஞ்சய் கதையில் படம் நடித்தால், நாம் விஜய்யின் அதிருப்திக்கும் ஆளாக வேண்டும், விஜய்யின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாக வேண்டும் என்று நினைத்து தான் சஞ்சய் கூறிய கதையை வேண்டாம் என சிவகார்த்திகேயன் நிராகரித்தார் என பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.