இலங்கை

அதிபர் வேட்பாளர் தொடர்பில் பொதுஜன பெரமுனவின் கூட்டம் விரைவில்!

அதிபர் வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் விசேட கூட்டம் இவ்வாரம் நடைபெறவுள்ளதாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தலுக்கான மொட்டுக் கட்சி வேட்பாளர் தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்  இது தொடர்பாக அவர் தெரிவிக்கையில், “எமது கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச, ஸ்தாபகர் பசில் ராஜபக்ச மற்றும் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள் இந்த வாரத்துக்குள் ஒன்றுகூடி இது பற்றி ஆராய்வார்கள்.

சவாலை ஏற்கக்கூடிய வெற்றி வேட்பாளர் ஒருவரை நிறுத்துவோம்.

அத்தோடு தேசிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பதற்குத் தாம் தயாரில்லை” என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button