இலங்கைமுக்கிய செய்திகள்

வெளிநாட்டிலுள்ள இலங்கையர்களுக்கு அறிவிப்பு

வெளிநாட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏதேனும் ஆபத்து அல்லது அசௌகரியம் ஏற்பட்டால், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் அதன் துணை நிறுவனங்களுக்கு ஒரே நேரத்தில் அறிவிக்கும் திறன் கொண்ட டிஜிட்டல் மயமாக்கல் செயன்முறைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

புதிய உலகிற்கு ஏற்ற வகையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கு இது வழி வகுக்கும் எனவும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அறிவித்துள்ளார்.

அத்தோடு, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை தெரிவிக்க பணிபுரியும் பகுதிகளில் உள்ள தூதரகங்களின் எண்கள் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, டிஜிட்டல் மயமாக்கல் அறிமுகப்படுத்தப்படுவதன் மூலம், முழு அமைப்பும் மாறும் என அமைச்சர் கூறியுள்ளார்.

அத்தோடு    இந்த அமைப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும், ஒவ்வொரு தொழிலாளியும் தனது பிரச்சினைகளை தொலைபேசியில் உள்ள இந்த ‘செயலி’ ஊடாக உடனடியாக கொழும்பில் உள்ள தூதரகத்திற்கு அல்லது தொடர்புடைய நபர்களுக்கோ செய்தியினை அனுப்பிவைக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button