முக்கிய செய்திகள்விளையாட்டு
4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா உலக சாதனை
பரிஸ் ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றின் முதல் சுற்றில் 4×400 கலப்பு ஓட்டத்தில் அமெரிக்கா புதிய உலக சாதனையை படைத்துள்ளது.
பந்தைய தூரத்தை மூன்று நிமிடங்கள் 7.41 வினாடிகளில் கடந்த அமெரிக்கா இந்த சாதனையை ஒலிம்பிக் அரங்கில் பதித்துள்ளது.
வெர்னான் நார்வூட், ஷமியர் லிட்டில், பிரைஸ் டெட்மன் மற்றும் கெய்லின் பிரவுன் அடங்கிய அமெரிக்க அணியே இந்த சாதனையை படைத்துள்ளது.