சமூகம்முக்கிய செய்திகள்

சற்றுமுன்னர் வைத்தியர் அர்ச்சுனா பிணையில் செல்ல அனுமதி!

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தீர்ப்பானது இன்று மன்னார் நீதவான் நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளது.

மன்னார் வைத்தியசாலைக்குள் கடந்த வெள்ளிக்கிழமை இரவு அத்துமீறி நுழைந்து காணொளிகளை பதிவு செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை சுமத்தி வைத்தியசாலை நிர்வாகம் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தது.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், வைத்தியரை மறுநாள் சனிக்கிழமை கைது செய்து வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்ட பின்னர், நீதவான் முன்னிலையில் முற்படுத்திய வேளை, வைத்தியரை எதிர்வரும் 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

இதனிடையே குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது அர்ச்சுனாவை இரண்டு சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button