சமூகம்முக்கிய செய்திகள்
ஆனையிறவு பகுதியில் கோர விபத்து – ஒருவர் பலி – மூவர் காயம்
கிளிநொச்சி – ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து சம்பவம் இன்று (9.08.2024) அதிகாலை ஆனையிறவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், நான்கு பேருடன் கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிளும் இன்று அதிகாலை ஆனையிறவு பகுதியில் ஒன்றன் பின் ஒன்று மோதுண்ட போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது சம்பவ இடத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஏனைய மூன்று பேரும் பலத்த காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
விபத்து தொடர்பாக கிளிநொச்சி போக்குவரத்து காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.