சமூகம்முக்கிய செய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண்ணை படுகொலை செய்த கணவன் : மகன் அளித்த வாக்குமூலம்

அவுஸ்திரேலியாவில்  கணவனால் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் நீதிமன்றில் சாட்சியமளித்துள்ளார்

மெல்பேர்ன் சாண்ட்ஹர்ஸ்ட் பகுதியில் 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மூன்றாம் திகதி தனது வீட்டில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பாக நேற்று (08) நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். தாயின் மரணத்தின் போது 17 வயதுடைய தினுஷ் குரேரா தனது 19 வயதில் நேற்று (08) 14 நீதிபதிகளிடம் காணொளி மூலம் சாட்சியமளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், ஆத்திரத்தில் தந்தை தாக்கிய போது உதவி கேட்டு அலறியடித்து தாய் ஓடியதாகவும் மற்றும் தந்தை கோடாரியால் துரத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சந்தேகநபரான தந்தை தாயை கோடரியால் தாக்கி நோயாளர் காவு வண்டி வாகனத்தை அழைக்கும் முயற்சியை தந்தை தடுத்ததையும் அவர் நீதிமன்றில் வெளிப்படுத்தியுள்ளார். மேலும், தப்பிக்க முயன்றால் அனைவரையும் வீட்டில் பெட்ரோல் ஊற்றி கொன்று விடுவதாக தந்தை மிரட்டியதாக இளைஞன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button