சமூகம்முக்கிய செய்திகள்
கொழும்பு புறநகர் பகுதிகளில் நாளை 12 மணித்தியால நீர்வெட்டு
அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக நீர் விநியோகத்தை துண்டிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
12 மணித்தியாலங்களுக்கு இவ்வாறு நீர் வழங்கல் மட்டுப்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் மாதம் ஞாயிற்றுக்கிழமை (11ஆம் திகதி) காலை 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
பேலியகொட, வத்தளை, ஜா அல, கட்டுநாயக்க, சீதுவ நகரசபை பகுதிகளுக்கும், களனி, பியகம, மஹர, தொம்பே, கட்டான, மினுவாங்கொட, பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகள் மற்றும் கம்பஹா பிரதேச சபையின் ஒரு பகுதிக்கும் நீர் விநியோகம் தடைப்படவுள்ளது.