கட்டுப்பணம் செலுத்தினார் திலித் ஜயவீர
மௌபிம ஜனதா கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடவுள்ள திலித் ஜயவீரவுக்கு ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
குறித்த கட்சியின் தலைவரான திலித் ஜயவீர சார்பில் இன்று (13) காலை தேர்தல்கள் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உட்பட கூட்டமைப்பின் உறுப்பினர்கள் குழு இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளது.
ஓகஸ்ட் 04 ஆம் திகதி கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற கூட்டமைப்பின் மாநாட்டின் போது ‘சர்வஜன பலய’ கட்சியின் செயற்குழு உறுப்பினர் விமல் வீரவன்ச, ஜயவீரவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருந்தார்.
இந்நிலையில், ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துதல் இன்று (13) நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெற உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட நேற்று வரை 32 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 16 வேட்பாளர்களும், வேறு அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட 1 வேட்பாளரும், சுயேட்சை வேட்பாளராக 15 பேரும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.