இலங்கைமுக்கிய செய்திகள்
கடவுச்சீட்டு விண்ணப்பம் இனி இணையத்தில்!
நேற்று முதல் அமலில்
கடவுச்சீட்டு பெற இனி நீங்கள் நேரில் செல்ல வேண்டிய அவசியமில்லை. இனிமேல் இணையத்தின் மூலமாகவே கடவுச்சீட்டுக்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என்று அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்த புதிய முறை நேற்று நள்ளிரவு 12 மணி முதல் அமுலுக்கு வந்துள்ளது. இதன் மூலம், கடவுச்சீட்டு பெறுவதற்கான நடைமுறைகள் மிகவும் எளிமையாகி, முந்தைய அரசின் ஒப்பந்தத்தால் ஏற்பட்ட கடவுச்சீட்டு தட்டுப்பாட்டை சமாளிக்க உதவும். பொதுமக்கள் கடவுச்சீட்டு பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.